அலோசியஸின் மனு தொடர்பில் விளக்கமளிக்க உத்தரவு

வௌிநாடு செல்வதற்கு தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு உத்தரவிடுமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் முன்வைத்துள்ள கோரிக்கை மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. 

ஜெப்ரி அலோசியஸ் முன்வைத்துள்ள கோரிக்கை மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

இதன்போதே எதிர்வரும் 05 ஆம் திகதி மன்றில் ஆஜராகி  விளக்கமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஜெப்ரி அலோசியஸ் மருத்துவ சிகிச்சைக்காக இம்மாதம் 14 ஆம் திகதியிலிருந்து இரண்டு மாத காலத்துக்கு இந்தியா மற்றும் சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாக அவரது சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். 

அதற்காக ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குமாறு ஜெப்ரி அலோசியஸின் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிடம் விளக்கம் வேண்டியுள்ளதாக தெரிவித்த நீதவான் எதிர்வரும் 05 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார்.




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment