தாய்வான் சீனாவின் ஒரு பகுதி, அதனை நாங்கள் சீனாவுடன் இணைப்போம் என சீன நாட்டு ஜனாதிபதி சி ஜின்பிங்
தெரிவித்துள்ளமையினால் சீனாவுக்கும் தாய்வானுக்குமிடையே போர்பதற்றம் எழுந்துள்ளது.
சீன அதிபர் சி ஜின்பிங், தாய்வான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். தாய்வானும், சீனாவும் ஒரே நாடுதான். ஆகவே தாய்வான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் எனத்தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய தாய்வான், எங்களது நாடு இறையாண்மை கொண்டது, யாரையும் கைப்பற்ற விட மாட்டோம் எனக் கூறியுள்ளது.
இந் நிலையிலேயே இரு நாடுகளுக்குமிடையில் தற்போது போர் பதற்றம் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment