மடுமாதா தேவாலயத்தின் திருவிழா

அருள் வளம் நிறைந்து ஆன்மிக மணங் கமழும் மன்னார் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.

நேற்று மாலை 05.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் இறைவேண்டலை முன்னெடுத்தார்.

அதன் பின்னர் மடுமாதா திருத்தல பரிபாலகர் அருட்பணி ச.ஜொ.பெப்பி சோசை அடிகளார் மடுமாதா திருத்தலக் கொடியினை ஏற்றிவைத்தார்.

அத்தோடு, மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் திருத்தந்தையின் கொடியினையும் தமிழ் மறையுரைஞர் அருட்பணி போல் நட்சத்திரம் அ.ம.தி அடிகளார் மற்றும் சிங்கள மறையுரைஞர் அருட்பணி அசங்க அ.ம.தி அடிகளார் ஆகியோர் இலங்கைத் திருச்சபைக் கொடியினையும் ஏற்றி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து பிரதான ஆலயத்தில் மாலை வழிபாடுகள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெற்றன.

கணிசமான தொகை மக்களே இந்த வழிபாடுகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment