மன்னார் அரச மருத்துவமனையில் தரமற்ற மருந்துகள்

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மைக் காலமாக முக்கிய  கிச்சைகளுக்கான மருந்துகள் இன்மையால் நோயாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்வதோடு,  தரமற்ற மருந்துகளே இங்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் மன்னார் மாவட்ட அரச அதிகாரிகள் சங்க மன்னார் கிளையின் செயலர் கசுன்சாமர.

மன்னார் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளை ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

கடந்த பல வருடங்களாக நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் காணப்பட்ட போதிலும் அண்மைக்காலமாக  அதிகளவிலான தட்டுப்பாடு நிலவுகிறது.

குறிப்பாக இருதய நோய் சர்ந்த மருந்துகள், சிறுவர்களுக்கான மருந்துகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க வேண்டிய மருந்துகள், உயர் இரத்தாலுத்தம் மற்றும் கண் நோய்களுக்கான மருந்து, நேய் எதிர்பு மருந்து என 33 க்கு மேற்பட்ட முக்கிய மருந்து வகை பற்றக்குறை தொடர்சியாக காணப்படுகிறது.

குறித்த மருந்துகளின் தேவை தொடர்பாக உரிய திணைக்களங்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும் எந்த வித பதில்களும் கிடைக்கவில்லை இதுவரையில் கிடைக்கவில்லை.

தொடர்சியாக தரமற்ற மருந்து வகைகளே மன்னார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  மருத்துவப் பொருள்களுக்கான பற்றாக்குறைக்கு  காலாவதித் திகதி அண்மையில் உள்ள மருந்துகள் அனுப்பி வைக்கப்படுவது ஒரு காரணமாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொடர்சியாக இவ்வாறு இடம் பெற்றுவருவதால் மிக அத்தியாவசியமான மருந்து பொருள்களின் பற்றாக்குறை காரணமாக மக்களுக்கு உரிய சிகிச்சை அழிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களம் மிக விரைவில் குறித்த பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்தி உரிய தீர்வை பெற்றுத் தராவிட்டால் விரைவில் மிக பெரிய போராட்டம் ஒன்றை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படவேண்டிய சூழ்நிலை உருவாகும். என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment