விசித்திரத் திருமணம்


நவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒரு ஊரில்தான் இப்படி  ஒரு திருமணம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர் எழுவனம்பட்டி. இங்கு ஒரு சமூக மக்கள் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.



இங்குள்ளவர்கள்  எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அல்லது ஏழையாக இருந்தாலும் ஊர் மந்தையில் தான் பாரம்பரிய சடங்குகளின்படி திருமணம் நடக்கிறது.

இங்கு ராமகிருஷ்ணன் - பவித்ரா தம்பதிக்கு நேற்றுத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பாலை மரத்தின் குச்சிகள் மற்றும் கிளைகள் வெட்டி எடுத்து வரப்பட்டது.



அந்தக் குச்சிகளை வைத்து மணப்பெண்ணுக்கு குடிசை கட்டிய பின்னர் அவர் அங்கு அமரவைக்கப்பட்டார்.

இதையடுத்து அருகில் விரிக்கப்பட்ட சாக்கில் மணமகன் ராமகிருஷ்ணன் அமர்ந்தார்.

பாரம்பரிய முறைப்படி திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டதோடு, மணமகன் பஞ்சகல்யாணி குதிரையில் ஊர் மந்தையை சுற்றி வந்தார்.


இறுதியில், குதிரையிலிருந்து கீழே இறங்க விடாமல் தாய்மாமன் மணமகனைத் தூக்கிக்கொண்டுபோய் மணமகளிடம் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து பாரம்பரிய வாழ்த்துப் பாடல்கள் ஒலிக்க ராமகிருஷ்ணன் பவித்ரா கழுத்தில் தாலி கட்டினார்.

பின்னர் இரு குடும்பத்தாரும் சேர்ந்து மகிழ்ச்சியாக நடனம் ஆடி அசத்தினார்கள்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment