கவுதமாலாவில் நிகழ்ந்த அரிய நிகழ்வு

மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில், மலையிலிருந்து வான் நோக்கி மின்னல் பாய்ந்து செல்லும் காட்சி வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கவுதமாலாவில் உள்ள வால்கன் டீ ஆகுவா மலையில் இந்த அரிய நிகழ்வு படம் பிடிக்கப்பட்டது. மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று பூமியில் இருந்து மேலே எழும்பும்போது, அது மேலும் குளிர்ச்சியடைந்து மேகங்களை உருவாக்கின்றன. இந்த மேகங்கள் அங்கிருக்கும் பிற மேகங்களுடன் உராயும் போது, இடி போன்ற சத்தத்துடன், மின்னல் போன்ற வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த மின்னல்கள் மேலிருந்து கீழ் நோக்கி வருவது வாடிக்கையான நிகழ்வாக கருதப்படுகிறது.

ஆனால் இதுவே, கீழிருந்து வான் நோக்கி மின்னல் உருவாகும் நிகழ்வு வால்கன் டீ ஆகுவா மலையில், அண்மையில் நடந்துள்ளது. இதற்கு உயரமான மலை உச்சியில் அதிகப்படியான மின்புலம்((enhanced electric Field)) இருந்ததே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற மின்னல், கடந்த இரு வாரங்களுக்கு முன்பும் நடந்ததாக தெரிவிக்கும் நிலையில், நாசா தனது இன்றைய வானியல் படமாக இதனை வெளியிட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment