இலங்கையின் நிலக்கண்ணிவெடி ஆபத்துக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சித்திட்டமாக பூகோளப் பங்காளர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை ஜெனீவாவில் பிரதானமன்றத்துடனும் பக்க நிகழ்வுகளுடனும் நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய ஒரு மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.
பிரதானமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் ஆரம்பத்தில் 1302 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டது. நிலக்கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் மீது அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நிலக்கண்ணிவெடி செயற்பாட்டுக்கான தகவல் முகாமைத்துவ முறைமையின்படி அதன் பயனாக 2019 ஏப்ரல் மாதமளவில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவுள்ள எஞ்சிய பகுதி 25 சதுர கிலோ மீற்றர்களாக குறைந்துள்ளது. எவ்வாறாயினும், ஏற்கனவே நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு எஞ்சியிருக்கும் நிலப்பகுதி 18.5 சதுர கிலோ மீற்றர்களாக இருப்பதுடன், வேறு அநேக நாடுகளுடன் ஒப்பிடும்போது அது மிகவும் பாராட்டத்தக்க அடைவாகவுள்ளது.
தேசிய கொள்கைகள், பொருளாதாரஅலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நேரடிநோக்கெல்லையின் கீழுள்ள தேசியநிலக்கண்ணிவெடி செயற்பாட்டு மத்திய நிலையம், அதன் விடயப்பொறுப்பு அமைச்சர் என்றவகையில் பிரதமரினால் நெறிப்படுத்தப்படுகிறது.
முந்திய கூட்டத்தில் நிலக்கண்ணிவெடி அகற்றல் சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் சம்பந்தமாக இளவரசர் மிரெத் ராத் செய்ட் அல்-ஹுஸைஸினால் பாராட்டப்பட்டது.
2020 ஆம் ஆண்டளவில் நிலக்கண்ணிவெடிகளற்ற ஒருநாடு என்ற நோக்கை அடைந்து கொள்வது இலங்கையின் இலக்காகும். எவ்வாறாயினும், நிலக்கண்ணிவெடிகள் உள்ள எஞ்சிய பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு கொடை வழங்குநர்களிடமிருந்து நிதிபெற்றுக்கொள்வது ஒரு துரிதத ேவைப்பாடாகும். அண்மையில் 6.8 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான உதவிகளை வழங்க நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளது. வேறு கொடைவழங்குநர்களும் நிலக்கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவி வழங்குவதற்கு அக்கறையுடன் காணப்படுவதுடன், அவசியமான மொத்த நிதியாக 30 மில்லியன் ஐ.அ.டொலர் தொகை மதிப்பிடப்பட்டுள்ளது.
யுனிசெப் மற்றும் பிறஅபிவிருத்திப் பங்காளர்களினால் நெருங்கிய ஒத்துழைப்புடன் வினைத்திறனான நிலக்கண்ணிவெடி ஆபத்துக் கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக நிலக்கண்ணிவெடியால் ஏற்படும் காயங்களையும் மரணங்களையும் குறிப்பிடத்தக்களவில் குறைக்க முடிந்தது. நிலக்கண்ணிவெடிஆபத்துக் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தில் பாடசாலைப் பிள்ளைகள், ஆசிரியர்கள், சமூகம், உலோகங்களைச் சேகரிப்போர், விறகு சேகரிப்போர் போன்ற ஆபத்தை எதிர்நோக்கும் கூடுதல் வாய்ப்புள்ள குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பிள்ளைகளுக்கு பாதுகாப்பான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிறநாடுகளுடன் ஒப்பிடும்போது, மரணங்களும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நிலக்கண்ணிவெடி ஆபத்துக் கல்வி மூலம் குறிப்பிடத்தக்க அளவால் குறைந்துள்ளது.
ஜெனிவா மன்றத்தில் கலந்துகொண்ட அநேகமான பங்காண்மை நாடுகளினால் இது வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சித்திட்டமாகக் குறிப்பிடப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கல் துறையானது கடந்த காலத்தில் பூகோள ரீதியாக கூடுதல் கவனம் செலுத்தப்படாததும் குறைவாக நிதியளிக்கப்பட்டதுமான ஒரு துறையாக காணப்பட்டது. இலங்கை தேசிய நிலக்கண்ணிவெடி செயற்பாட்டு உபாயமுறையினால் முதலுதவி, மருத்துவச்சிகிச்சைகள், ஆலோசனை, உள-சமூக உதவிகள், செயற்கைக் கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகள், கைப்பிடிகள், ஊன்றுகோல்கள் முதலான ஆதார கருவிகள் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குவதன் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
நிலக்கண்ணிவெடிகளுக்கு இரையானவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார ரீதியாகமீண்டும் சமூகத்தோடிணைவதற்கு இயலுமானவகையில் அவர்களுக்கு தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியளிப்பது நிலக்கண்ணி வெடிசெயற்பாட்டு உபாய முறையின்மைய இலக்காகும். இந்த உபாயமுறையினால் நிறுவன ரீதியான சமூகப் பொறுப்புகளின்கீழ் தனியார்துறை நிதிகளை ஈடுபடுத்துவதற்கும் வழிகோலுகின்றது.
ஹலோட்ரஸ்ட்,மெக், இலங்கை இராணுவம் என்பன நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. கொடை வழங்குநர்கள், சர்வதேச அரசசார்பற்ற ஒழுங்கமைப்புகள், ஐக்கியநாடுகள் முகவராண்மைகள் உள்ளிட்ட அரச சார்பற்ற ஒழுங்கமைப்புகளும் மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றும் ஜெனீவா சர்வதேச மத்திய நிலையத்தின் செயற்படுத்துவதற்கான உதவி அலகுடன் இணைந்து அரசாங்கத்தின் உயர்மட்ட அர்ப்பணிப்பு, தேசிய உரித்து, அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பும் கண்காணிப்பும் இலங்கையின் நிலக்கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சித்திட்டமாகக் கருதப்படுகிறது.
நிலக்கண்ணிவெடித் தடை பற்றிய ஒட்டாவாசமவாயத்தின் 5 ஆம் வாசகத்திற்கு அமைவாக இலங்கை அதன் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஒட்டாவா சமவாயத்திற்கு அமைவாக 737,464 ஆள் எதிர்ப்பு நிலக்கண்ணிவெடிகளும் 1,407,689 வேறுவெடிபொருள்களும் இலங்கையினால் நிர்மூலமாக்கப்பட்டன. மேலும், இலங்கை தேசிய நிலக்கண்ணிவெடி செயற்பாட்டுநியமங்களுடன் அமைந்தொழுகுவதுடன்,மீள்குடியேற்றத்திற்கானகுடியிருப்புப் பகுதிகள்,வாழ்வாதாரப் பகுதிகள்,விவசாயமற்றும் உட்கட்டமைப்பு வசதிஅபிவிருத்திப் பகுதிகள் உள்ளிட்டபாடசாலைகள்,மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களை அணுகுவதற்கு அவசியமானபகுதிகள் போன்ற உயர் தாக்கமுள்ள பகுதிகளுக்குமுன்னுரிமை அளிக்கப்படுகிறது
செயற்பாட்டு உதவிஅலகும் மனிதாபிமானநிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கான ஜெனீவாசர்வதேசமத்தியநிலையமும் நிலக்கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நிதியங்களை ஈடுபடுத்துவதில் வசதியளிக்கும் பொருட்டுதேசியகொள்கைகள், பொருளாதாரஅலுவல்கள்,மீள்குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு,வடக்குமாகாணஅபிவிருத்திமற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுடன் மிகநெருங்கிய ஒத்துழைப்புடன் செயலாற்றுகின்றன.
பங்குபற்றியோர்
நிலக்கண்ணி வெடி அகற்றும் வேலைத்திட்டத்திலான இலங்கையின் முன்னேற்றமானது ஜெனீவா ஐக்கிய நாடுகள் அமைப்பின் நோர்வேக்கான நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கான ஜெனீவா சர்வதேச மத்திய நிலையத்தின் உபாயமுறை முகாமைத்துவம் பற்றிய மதியுரைஞர் திருமதி அசாமசல்பர்க் மற்றும் ஏனைய தரப்பு நாடுகளின் பாராட்டைப் பெற்றது.
மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கான ஜெனீவா சர்வதேச மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தூதுவர் ஸ்டெபானோடொஸ்கானோ, ஜெனீவாவிலுள்ள ஐக்கியநாடுகள் அமைப்பின் நோர்வேக்கான நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், ஜெனீவாவிலுள்ள ஐக்கியநாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ.அசீஸ், GICHD அமுலாக்கல் உதவி அலகின் பணிப்பாளர் ஜூவான் கார்லோஸ் ருஅன், மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கான ஜெனீவா சர்வதேச மத்திய நிலையத்தின் உபாய முறை முகாமைத்துவம் பற்றிய மதியுரைஞர் திருமதி அசாமசல்பர்க்,பல்வேறுதரப்புநாடுகளிலிருந்து இன்னும் அநேகஅதிகாரிகளும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment