ஆறு வயது சிறுவனுக்கு சூடு வைத்தக் குற்றச்சாட்டில், அந்தச் சிறுவனின் தாயை, மாத்தளை பொலிஸார், இன்று கைதுசெய்துள்ளனர்.
மாத்தளை உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணொருவரே, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவன், சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment