வெப் சீரிசிலும் நடிக்கிறார் காயத்ரி


பல படங்களில் திறமையாக நடித்தாலும் இன்னும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க முடியாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் காயத்ரி. 

தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். 

அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக மகாமனிதன் படத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையில் வெள்ள ராஜா என்ற வெப் சீரிசிலும் நடிக்கிறார். 

இதுபற்றி அவர் கூறியதாவது:

வெப் சீரிஸ் என்பது சினிமாவுக்கு மாற்றல்ல. சினிமாவின் இன்னொரு பரிமாணம். 

பல மணி நேரம் செலவு செய்து தியேட்டருக்கு போக முடியாதவர்களுக்கு இது ஒரு களம்.


வெளிநாடுகளில் எப்போதோ வந்துவிட்டது. நம்நாட்டில் இப்போதுதான் வந்திருக்கிறது. வெப்
சீரிஸ் பெருகினாலும், சினிமாவுக்கான ஆடியன்ஸ் எப்போதும் இருப்பார்கள்.


வெள்ள ராஜாவில் நான் வழக்கறிஞராக நடிக்கிறேன். இயற்கை வளங்களை காப்பாற்ற கார்பரேட்
கம்பெனிகளை எதிர்த்து போராடுகிற துணிச்சலான கேரக்டர். 

நடிக்கிறதுக்கு நிறைய இடம் இருக்கு. வெப் சீரிசில் நடித்தாலும் சினிமாதான் என் பர்ஸ்ட் சாய்ஸ். 

இரண்டிலும் பயணிக்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக இரண்டையும் பிரித்து பார்க்க விரும்பவில்லை. 

எந்த வடிவிலாவது ஆடியன்சுக்கிட்ட நாம போய் சேரணும். அதுதான் முக்கியம். என்கிறார் காயத்ரி.
Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment