மன்னார், தரவன் கோட்டை பகுதியிலுள்ள வீடொன்றின் வளாகத்தினுள் நுழைந்த முதலையை அவ்வீட்டின் உரிமையாளர், பிரதேச மக்களின் உதவியுடன் பிடித்து கட்டி வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இன்று அதிகாலை குறித்த வீட்டின் வளாகத்துக்குள் நுழைந்த சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலையையே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வீட்டினைச் சுற்றி குளம் மற்றும் நீர்த்தேக்கம் எவையும் காணப்படாத நிலையில், இந்த முதலை வீடுகளிலுள்ள கால்நடைகளை வேட்டையாடும் நோக்கில் காட்டிலிருந்து கிராமத்திற்குள் நுழைந்திருக்க வேண்டுமென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதலை தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் பொலிஸார் ஆகியோருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment