வெற்றியீட்டியது நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற  இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

 நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட் இழப்புக்கு 319 ஓட்டங்களைப் பெற்றது. 

அந்த அணி சார்பாக முன்ரோ 87 ஓட்டங்களையும், டெய்லர் 90 ஓட்டங்களையும் பெற்றனர். 

லசித் மாலிங்க 45 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 

களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது. 

இலங்கை அணி சார்பாக திசர பெரேரா 140 ஓட்டங்களையும், குணதிலக 71 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை அணி வீரர் திசர பெரேரா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது முதலாவது சதத்தினைப் பதிவு செய்துள்ளார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment