காணாமல் போன ஆணொருவர் நான்கு நாள்களின் பின்னர் மகிழூர் பெரியகுளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகிழூர் கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 42 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 17 ஆம் திகதி வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வராத காணரத்தால் உறவினர்கள் இவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருந்தபோதே அவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டடுள்ளது.
இவர் முதலைக் கடிக்கு உள்ளாகி அதனால் உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment