நயனைத் தள்ளிய காஜல்

 ஹிந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற குயின் படம், தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. 

இதனை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாரிக்கிறார். 

தெலுங்கில் தட்ஸ் மஹாலக்ஷ்மி, கன்னடத்தில் பட்டர்ப்ளை , மலையாளத்தில் ஜம் ஜம் என்றும் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் டீசர், பலரின் கவனத்தை ஈர்த்து யு-டியூப்பில் நம்பர் ஒன் ட்ரெண்டில் இருந்து வந்தது. தற்போது இப்படத்தின் டீசர் 70 இலட்சம் பார்வைகளை கடந்துள்ளது. 

இதற்கு முன் பெண் கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு நயன்தாராவின் கோலமாவு கோகிலா, 6 மில்லியன் பார்வைகளை பெற்று யு-டியூப்பில்  சாதனை படைத்திருந்தது. தற்போது இந்த சாதனையை காஜல் அகர்வாலின் "பாரிஸ் பாரிஸ்" டீசர் முறியடித்துள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment