இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் ஒப்பந்தம்!

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிக்கோ ருரேரேயுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இருதரப்பு  பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்காக விசேட நிகழ்வொன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு, கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் அரச தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து கைச்சாத்தி டப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ பயண த்தை மேற்கொண்டு சிங்கப்பூர் விமானத்தில்,நேற்று பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்திருந்தார்.
பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு பிலிப்பைன்ஸ் ஆயுதப்படை யினரின் அணிவகுப்புடன் கூடிய செங்கம்பள வரவேற்பளிக்கப் பட்டது.
மேலும் குறித்த  விஜயத்தின் போது, ஜனாதிபதி  பிலிப்பைன்ஸ் மனிலா நகரில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் மற்றும் லொஸ் பெனோஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற் கொள்ளவுள்ளதாகவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹினோ நாகாஓவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment