விடுவிக்கப்பட்ட காணிகளில் கிணற்றைக் காணோம்

வலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் 19 ஏக்கர் காணிகள் இன்றையதினம்  மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.

படையினரால்  தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவசிறியிடம் உத்தியோக பூர்வமாக காணிகள் கையளிக்கப்பட்டன.

தையிட்டி வடக்கு, தெற்கு 249,250 பிரிவுகளுக்குரிய காணிகளே இவ்வாறு கையளிக்கப்பட்டன.

முப்பது வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் 25 வீடுகள் உள்ளன. 

எனினும் விடுவிக்கபட்ட காணிகளில் இருந்த கிணறுகள் பலவற்றைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

 வீடுகளில் இருந்த மலசல கூடக் கோப்பைகள் பெயர்க்கப்பட்டு, அந்த இடங்களில் போத்தல்களால் மறைக்கப்பட்டிருந்தன.

படையினர் தாம் புதிதாகக் கட்டிய கட்டடங்களையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment