பிாித்தானியாவில் அமுலாகிய புதிய சட்டம்







பெண்களின் பாவாடைக்கு கீழ் புகைப்படம் எடுக்க முற்பட்டால் பிரித்தானியாவில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்ற சட்டத்தை ஒரு பெண் பலபோராட்டத்திற்கு பிறகு நிறைவேற செய்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஜீனா மார்டின் அழகான தோற்றம் கொண்டவர். அவர் லண்டனில் உள்ள ஹைட் பார்க்கில் நடந்து வந்த போது இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து அவருடன் பேச்சு கொடுக்க முற்பட்டனர்.

ஆனால் அவர் அவர்களிடம் பேசவிரும்பம் தெரிவிக்காமல் விலகி சென்றுள்ளார். இந்நிலையில் வாலிபர்களை அவர்கண்டிக்கும் நேரத்தில் ஒருவன் அவரை திசை திருப்ப மற்றொருவன் அவர் உடுத்தி இருந்தபாவடைக்கு கீழ் கெமராவை வைத்து போட்டோ எடுத்துள்ளான்.

இதைபார்த்து அதிர்ந்து போன ஜீனா அங்கிருந்த காவல் துறையினரிடம்புகாா் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் இது ஒரு குற்றமாகாது என்று கூறிஅவர்களை விடுவித்துள்ளது.

இதனால் கோவம் கொண்ட ஜீனா தானக்கு நிகழ்ந்த சம்பவம்குறித்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் தலைவர்களுக்கு கடிதம்எழுதி உள்ளார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் போட்ட பதிவு நாடு முழுவதிலும் பரவிஆதரவு வழங்கப்பட்டது. இதில்அவருக்கும் வழக்கறிஞர் நண்பரான ரையான் உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இந்த குற்றத்திற்குதண்டனை வழங்கும் வகையில் பெண் எம்.பிகள் சட்ட மசோதா தாக்கல் செய்ய முன்வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிகிழமை அன்று மசோதா தாக்கல் செய்யபட்ட நிலையில் ஒரு எம்.பி மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். வெள்ளி கிழமை என்பதால்விவாதிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது

இந்நிலையில் பிரதமராக ஒரு பெண் இருக்கும் நாட்டில் இந்த நிலையாஎன்று பலர் கேள்வி கேட்க துவங்கினர். எனவே அரசு சட்டமாக்க பிரதமர் தெரசாமேமுன்வந்தார்.

மேலும் புதன் அன்று அந்த மசோதா பிரபுகள் சபையிலும் ஒப்புதல்வழங்கப்பட்டது. அதன்படி அப்ஸ்கெர்ட் எனப்படும் பெண்களின் பாவடைக்கு கீழ் படம் எடுத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜீனா பேசுகையில் அரசியல் சட்டம் என்று எதற்கும் பயப்படதேவையில்லை போராடினால் வெற்றி பெற இயலும் என்று தெரிவித்தார்.

Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment