பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இந்த ஆண்டின் முதல் பயணமாக Créteil நகருக்கு சென்று கைப்பந்தாட்ட மைதானம் ஒன்றை திறந்து வைத்தார்.
மஞ்சள் ஆடை போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் கைப்பந்தாட்ட மைதானம் ஒன்றை திறந்து வைக்க Créteil நகருக்கு சென்றிருந்தார்.
இது 2019ஆம் ஆண்டில் அவரது முதல் அரசுமுறை பயணம் ஆகும். திறப்பு விழா நடைபெறும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் மஞ்சள் ஆடை போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மேக்ரான் பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
எனினும் பொலிசார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர். இந்நிலையில், மதியம் 3 மணியளவில் மைதானத்தை திறந்து வைக்க வந்த மேக்ரானை, கைப்பந்தாட்ட நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் வரவேற்றனர்.
அப்போது மேக்ரானிடம் மாநில தலைவர், நீங்கள் உருவாக்கிய கனவுகளுக்கு நன்றி. இப்போது இது விளையாடுவதற்கான நேரம். பந்து உங்கள் முகாமில் உள்ளது. நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம் என தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மேக்ரான் அங்கிருந்து பாதுகாப்பாக கிளம்பி சென்றார். பதட்டமான சூழ்நிலைகள் மேக்ரானுக்கு சிரமங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் தொடர்ச்சியான பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment