ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை தாம் பரிந்துரை ப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அவர் வேட்பா ளராக முன்னிலைப்படுத்தப்பட்டால் அதனை தேர்தல் ஆணைக்குழுவால் நிராக ரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசியல் அமைப்பின் சமஷ்டி பண்புகள் முன்னிலைப்பெறுமாயின் அதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment