என்னை இப்படியும் அழைத்தார்கள் பாடகி சின்மயி!

ஹைதராபாத் இலக்கிய விழாவில் கலந்துகொண்டு பேசிய பாடகி சின்மயி, என்னை ஒரு நாளைக்கு 15 முறை விபச்சாரி என அழைத்தார்கள், ஆனால் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் நான் மீண்டு வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

மீடூ மூலம் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதையடுத்து தமிழ் திரையுலகில் எனக்கு எதிர்ப்புகள் அதிகம் வந்தது. நான் பாஜக கட்சியை சேர்ந்தவள் மற்றும் எனது சாதியை வைத்து தவறாக சித்தரித்தார்கள்.

ஒரு நாளைக்கு 15 முறை விபச்சாரி என அழைக்கப்பட்டேன். வைரமுத்து மீது புகார் தெரிவிக்க பல பெண்கள் முன்வரவில்லை. காரணம், நான் எவ்வாறு நடத்தப்பட்டேன் என்பதை பார்த்து அவரகள்; பின்வாங்கிவிட்டார்கள்.

என் உடல் பாதுகாப்பைப் பற்றி நட்புரீதியான எச்சரிக்கையைப் பெறுகிறேன். எதிர்காலத்தில் நான் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என கூறியுள்ளார்.Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment