சுவிற்ஸா்லாந்தில் நபா் ஒருவா் உயிருடன் புதைப்பு!

சுவிட்சர்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த நபர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் இக்கொடூரம் இடம்பெற்றுள்ளது.
பெர்ன் மண்டலத்தில் குழு ஒன்று கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது குழி ஒன்றை ஆழமாக தோண்டும் பணியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டதில் அந்த நபர் உயிருடன் புதையுண்டுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த எஞ்சிய குழுவினர் அவரை அந்த குழியில் இருந்து மீட்க கடுமையாக போராடியும், எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து மண்டல பொலிசார் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்பு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் புதையுண்ட நபரை குழியில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர்.
தற்போது பெர்ன் மண்டல பொலிசார் இந்த விபத்து தொடர்பில் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment