உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக முற்றவெளி மைதானத்தில் அமைக்க ப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இன்று நடைபெற்றது.
தமிழ்bதேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில், கூடியிருந்த மக்கள் மத்தியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 11 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment