விமான பயணிகளுக்கு இழப்பீடுதுருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நோக்கி பயணமான மூன்று பயணிகளுக்கே இழப்பீடாக தங்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


சம்பவத்தன்று இஸ்தான்புல் செல்ல குறித்த மூன்று பயணிகளும் குவைத்தின் வதானியா விமான சேவை நிறுவனத்தில் முன்பதிவு செய்துள்ளனர்.


ஆனால் விமானம் போதிய பயணிகள் பதிவு செய்யாததால் பயணத்தை ரத்து செய்துள்ளது. இதில் குறிப்பிட்ட 3 பயணிகளின் திட்டமிடப்பட்ட பயணம் முடங்கியதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து மூவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் மூவருக்கும் தலா 271.825 குவைத் டினார் அளவுக்கு தங்கம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.


விமான சேவை நிறுவனங்கள் தாமதித்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு குவைத் நாடு மேற்கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment