அண்ணன், தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிரங்கநாதன் சுதாகரன் என்பவரே சாவடைந்துள்ளார்.
குறித்த சகோதரர்கள் இடையில் காசு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீண்டகாலமாக பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு அண்ணன் தம்பிக்கு இடையில் காசு பிணக்கு வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது.
வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறிய போது தம்பி மீது அண்ணன் கத்தியால் குத்த, அண்ணன் மீது தம்பி கொட்டனால் தாக்கியுள்ளார். கொட்டன் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான தம்பி மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment