தலை விாித்தாடும் ஜாதிக் கொடுமை

இந்தியாவில் ஜாதிக் கொடுமை காரணமாக இறந்த தனது அம்மாவின் உடலை மகன் சைக்கிளில் எடுத்துச் சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா (45). கணவரை இழந்த இவர் 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று எப்போதும் போல் தண்ணீர் எடுக்கச் சென்ற ஜானகி, அங்கு தடுமாறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின் சரோஜ் தன் அம்மாவிற்கு இறுதி சடங்கு செய்ய அக்கம் பக்கத்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

ஜானகி தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், யாரும் உதவ முன்வரவில்லை. இதனால் மிகுந்த வேதனையடைந்த சரோஜ் மனம் தளராமல் அம்மாவின் உடலை சைக்கிளின் பின்னால் வைத்து, பேலன்ஸ் செய்வதற்காக இரண்டு கம்புகளை, சைக்கிளின் இரு பக்கமும் பொருத்தி, அதன்மேல் மரக்கட்டையை வைத்து அம்மாவின் உடலை கிடத்தினார்.

பின், தன் தலையில் ஒரு துண்டை போட்டுக் கொண்டு சுமார் 5 கி.மீற்றர் அம்மாவின் உடலை காட்டுக்குள் கொண்டு சென்றார்.

போகும் வழியில் பலரும் என்னப்பா இது என்று கேட்ட போது, என் அம்மா என்று பரிதாப குரலில் சென்றுள்ளார்.

பிறகு யார் உதவியும் இன்றி தனியாளாக காட்டுக்குள் அவரை அடக்கம் செய்துவிட்டு சரோஜ் திரும்பினார். இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment