திசர பெரேரா கடும் அதிருப்தியில்

இலங்கையின் ஒரு நாள் அணியின் தலைமைத்துவம் குறித்து கவலை தெரிவிக்கும் கடிதமொன்றை  சகலதுறை வீரர் திசாரபெரேரா இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கையின் ஒரு நாள் அணியின் தலைவர் லசித்மலிங்கவின் மனைவி திசாரபெரேரா குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களால் சர்ச்சைகள் உருவாகியுள்ள நிலையிலேயே திசார பெரேரா இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரிமாறப்படும் விடயங்கள் காரணமாக இலங்கையின் ஒரு நாள் அணி நகைப்பிற்குரியதாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை தலையிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் திசாரா பெரேரா  இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.

அணியின் தலைவராக உள்ளவரின் மனைவி குற்றச்சாட்டுகளை சமூக ஊடகங்களில் சுமத்தும்போது பொதுமக்கள் அதனை நம்புவதை தடுக்க முடியாது.

இது குறித்து  திசர பெரேரா தெரிவித்ததாவது,

முகநூல் பதிவு வெளியான நாள் முதல் அணிவீரர்கள் மத்தியில் குழப்பநிலை காணப்படுகின்றது.

இருசிரேஸ்ட வீரர்கள் மோதிக்கொள்ளும்போது இளம் வீரர்களிற்கு அது நெருக்கடியான சூழலை ஏற்படுத்துகின்றது. 

மோதல்கள் காரணமாக எங்களால் ஒரு அணியாக விளையாட முடியாத நிலை காணப்படுகின்றது.

அணிக்குள் ஸ்திரதன்மையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதே தலைமைத்துவத்தின் முக்கிய பணியாக அமையவேண்டும் எனினும் இவைஎவையும் எங்கள் அணியில் இல்லை.

நாங்கள் உலக கோப்பையை எதிர்கொள்ளவுள்ளோம் இந்த தருணத்தில் சமூகஊடகங்கள் மூலம் தேவையற்ற விடயங்களிற்காக மோதுவதை விட சிறப்பாக விளையாடுவது குறித்தே நாங்கள் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. என்றார். 



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment