காஜலின் மறுபக்கம்


மும்பையில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால். 

10 கி.மீட்டர் தூரத்தை 70 நிமிடங்களில் கடந்தார். கடந்த ஆண்டைவிட 8 நிமிடங்கள் குறைவாக இந்த முறை தான் ஓடியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், முறையான மூச்சுப்பயிற்சி, தியானம் செய்து தான் மரதன்  ஓட்டத்தில் கலந்து கொண்டேன். 

அதற்கு முக்கிய காரணம், அரகு பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்களிலிருந்து பள்ளிக்குப் படிக்க வரும் பிள்ளைகளுக்கு நிதி திரட்டவே இந்த மரதனில் நான் கலந்து கொண்டேன் என்றார்.

காஜல் தெரிவித்ததை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment