150 வீடுகளுக்கு இன்று அடிக்கல்

வவுனியா மாவட்டத்தில் 6 மாதிரிக் கிராமங்களை உள்ளடக்கிய 150 வீடுகளுக்கு இன்று அடிக்கல் நடப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரி வீட்டுத் திட்டத்துக்கு அமைவாக,  தரணிக்குளம் பகுதியில் மூன்று கிராமங்களும், கட்டடையர்குளம், தம்பனைசோலை, பீடியாபாம் ஆகிய கிராமங்களும் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்டப் பிரதி முகாமையாளர் சுசிகரன் தலைமையில் 
 நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாண முன்னாள் உறுப்பினர் செ.மயூறன், பிரதேச சபையின் தவிசாளர் து .நடராஜசிங்கம், பிதேசசபைஉறுப்பினர் மங்களநாதன்,யோர்ச் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment