46 ஆண்டுகளுக்கு பிறகு காசியாத்திரை

பழம்பெரும் திரைக்கதை ஆசிரியர் வி.சி.குகநாதன். இவர் எழதிய நாடகம்தான் காசியாத்திரை. 300 மேடை ஏறிய இந்த நாடகம் 1973 ஆம் ஆண்டு சினிமாவாக தயாரானது. 

எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். வி.கே.ராமசாமி, மனோராமா, ஸ்ரீகாந்த், சோ, சுருளிராஜன், ஜெயா, குமாரி பத்மினி, தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். 

சங்கர் கணேஷ இசை அமைத்திருந்தார், பாபு ஒளிப்பதிவு செய்திருந்தார். முழுநீள காமெடி படமான இது அன்றைக்கே 100 நாள் படம்.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 46 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிறது. வி.சிகுகநாதன் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். 

பிரபல சினிமா விநியோக நிறுவனமான மனோஜ் சினி கம்பைன்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. புகழ்மணி இயக்குகிறார். படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. 

வருகிற மார்ச் மாதம் 6ந் தேதி படப்பிடிப்புகள் தொடங்குகிறது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து மே மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment