யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 72 kg கேரளாக் கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளனர்.
இன்று இரவு 8 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களான தினேஸ், நிரோஸன், றெஜி ஆகியோர் குறித்த கஞ்சா கடத்தலை முறியடித்துள்ளனர்.
யாழ்ப்பாணத் திலிருந்து பின்தொடர்ந்து விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் குறித்த கடத்தல் காரர்களை தென்மராட்சி எல்லைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர். கையகப்படுத்திய கஞ்சாவுடன கைது செய்த இரண்டு சந்தேக நபர்களையும் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment