சோறு சிக்கி குழந்தை சாவு

தொண்டைக் குழியில் சோறு சிக்கியதால், குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று, ஏறாவூரில் சம்பவித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலையடித்தோணா கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்களேயான சரத்குமார் நீஷான் என்ற குழந்தையே இவ்வாறு, நேற்று முன்தினம் சாவடைந்துள்ளது.

உணவு உட்கொண்டிருந்த குழந்தைக்கு விக்கல் ஏற்பட்டதையடுத்து, அவஸ்தையுற்றுள்ளது. எனினும், சற்று நேரத்தில் குழந்தை அசைவற்று இருந்துள்ளது.

சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், சிசு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் தொமர்பில் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருவதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment