இலங்கை வருகிறது இராணுவத்தின் சடலங்கள்

ஆபிரிக்காவின் மாலி இராச்சியத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி  உயிரிழந்த   இலங்கை இராணுவத்தினரின் இரு சடலங்களும் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன.

பிற்பகல் 3 மணியளவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்களின் சடலங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்போது சடலங்களுக்கு விசேட மரியாதை செலுத்துவதற்கு இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த மாதம் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில்   இலங்கை இராணுவத்தினர் இருவர் சாவடைந்தனர்.  

இந்தத் தாக்குதலில் மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட் விஜேகுமார ஆகியோர் உயிரிழந்துடன், மேலும் ஆறு படையினர் காயமடைந்தனர்.

தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment