மேற்கிந்தியத்தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து - மேற்கிந்தியத்தீவு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது. 

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 277 ஓட்டங்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மேற்கிந்தியத்தீவு அணி,  இங்கிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 154 ஓட்டங்களில்  சுருண்டது. 

அதிகபட்சமாக கேம்ப்பெல் 41 ஓட்டங்களும், ஷேன் டோவ்ரிச் 38 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். 

இங்கிலாந்து அணி தரப்பில் மார்க்வுட் 5 விக்கெட்டும், மொயீன் அலி 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 123 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 2 ஆவது நாள் ஆட்டம் முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 

ரோரி பர்ன்ஸ் 10 ஓட்டங்களுடனும், ஜென்னிங்ஸ் 8 ஓட்டங்களுனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

3 ஆவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது 2 ஆவது இன்னிங்சில் 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்தது. 

ரோரி பர்ன்ஸ் 10 ஓட்டங்களிலும், ஜென்னிங்ஸ் 23 ஓட்டங்களிலும்  ஆட்டம் இழந்தனர். ஜோ டென்லி 45 ஓட்டங்களுடனும், கேப்டன் ஜோரூட் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment