சூரியனை விழுங்குமா அந்த பிளாக் ஹோல்?

மெய்நிகர் தொலைநோக்கி
கடந்த 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சர்வ்தேச ஒத்துழைப்பின் கீழ் பூமி அளவிலான ஒரு மெய்நிகர் தொலைநோக்கி - ஈவென்ட் ஹாரிஸான் தொலைநோக்கி - உருவானது. ஒரு கருப்பு துளையின் முதல் நேரடி புகைப்படத்தை கைப்பற்றும் இலக்குதனை கொண்டு இருந்த இந்த தொலைநோக்கியிடம் இருந்து சேமிக்கப்பட்ட தரவுகள் பூமிக்கு வந்துள்ளது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தரவுகள் ஆனது, ஹார்ட் டிரைவ்கள் அளவில் கிடைத்துள்ளது. அதை முழுமையாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூடிய விரைவில், கருப்பு துளையின் முதல் நேரடித் தோற்றத்தை நமக்கு வழங்கும் ஒரு முக்கிய கூறுபாடு கண்டு அறியப்படும் என்று கூறி உள்ளார்கள்.


இதுவரையிலாக, ஓவிய கலைஞர்களின் வியூகத்தின் கீழ் மட்டுமே கருப்பு துளைகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அவைகள் எல்லாமே வெறும் எடுத்துக்காட்டுகள் தான். அந்த ஓவியங்களில் ஒன்று கூட, விண்வெளியில் மறைந்து கிடைக்கும் கருந்துளையின் உண்மையான முகத்தை காட்சிப்படுத்தும் படி இல்லை. இந்த இடத்தில் நட்சத்திரங்களை உதாரணமாக எடுத்து கொள்ளலாம், ஓவியங்களில் காட்சிப்படுத்தப்படும் நட்சத்திரங்கள் மிகவும் அழகானதாக பிரகாசமானதாக இருக்கும். ஆனால் உண்மையில் அவைகள், மிகவும் இறுக்கமாக கட்டப்பட்ட, அதிக வெப்பநிலை கொண்ட ஒரு விண்வெளி பொருட்களாக திகழ்கின்றன. ஆக கருந்துளை சார்ந்த ஓவியங்களை நம்புவது அவ்வளவு புத்திசாலித்தனமான ஒரு காரியமாக இருக்காது என்பது வெளிப்படை.

ஆக ஈவென்ட் ஹாரிஸான் தொலைநோக்கியில் இருந்து விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பது என்ன? நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்பது போல, கருப்பு ஓட்டைகள் உண்மையிலேயே கறுப்பாக தான் இருக்கின்றன. அதாவது, அவை மிகவும் சிறிய இடத்திலேயே மிக அதிகமான அழுத்தம் கொண்ட பிராந்தியங்களாக இருக்கின்றன. அத்தகைய சக்தி வாய்ந்த ஈர்ப்பு மண்டலங்களுக்குள் புகும் எதுவும் தப்பிக்க முடியாமல் போகிறது. இந்த பட்டியலில் நமது பிரபஞ்சத்தின் மிக வேகமாக பயணிக்கும் ​ஒளியின் வேகமும் அடங்கும். அதனால் ஈவென்ட் ஹாரிஸான் கொண்டு கருப்பு துளைக்குள் இருக்கும் ஒன்றின்மையை (ஒன்றும் இல்லாமை) பிடிப்பதை நோக்கமாக கொண்டிருக்காமல் கருப்பு துளையின் நிகழ்வை (கோள வடிவில் அதை அதை சுற்றி உள்ள திரும்பி மீள முடியாட்டிகா புள்ளி) கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆய்விற்கான முதல் தர்க்கரீதியான தேர்வு தனுசு ஏ (Sagittarius A) நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரம் ஆனது நமது விண்மீனின் பால்வெளி மையத்தின் நடுவே அமைந்துள்ள - சுமார் 4 மில்லியன் சூரிய-வெகுஜன எடையை கொண்டுள்ள - ஒரு கருப்பு துளை ஆகும். சூப்பர்மேசிவ் பிளாக் ஹோல் என்று அழைக்கப்படும் இது பூமியில் இருந்து சுமார் 27,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

ஈவென்ட் ஹாரிஸான் தொலைநோக்கியின் இரண்டாவது இலக்கு, பூமியில் இருந்து மிக மிக மிகவும் தூரமாக உள்ளது. அதாவது பூமியில் இருந்து சில 50 முதல் 60 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது எம்87ன் மையத்தில் உள்ள சூப்பர்மேசிவ் பிளாக் ஹோல் ஆகும். எம்87 தான் நமது விண்மீன் கிளஸ்டர் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய விண்மீன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் காணப்படும் பிளாக் ஹோல் ஆனது சுமார் 6 பில்லியன் சூரிய எடைக்கு சமமாகும். இது மிகவும் பெரியது ஆக பலமானது, அதாவது இதனால் நமது ஒட்டுமொத்த சூரிய மண்டலத்தையும் கூட விழுங்க முடியும்.

இந்த இரண்டு பிளாக் ஹோல்களின் ஒரு புகைப்படத்தை நாம் பெற போகிறோம் என்று அறிவியல் ஆர்வலர்கள் பூமிக்கும் வானத்திற்கும் குதிக்க, மறுபக்கம் அறிவியல் அறிந்த சாமானிய மக்கள் - "ஒரு புகைப்படத்திற்கு ஆசைப்பட்டு பூமியின் கதையை முடித்து விடாதீர்கள்!" என்று கூறிய வண்ணம் உள்ளனர்.
Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment