யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, ஊரிக்காடு பகுதியில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இடைக்காடு, அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனின் சடலமென ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
ஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் அவர் விழுந்து கிடந்துள்ளார்.
அதனை அவதானித்த சிலர், அந்த இளைஞனை விரைவாக மீட்டு, அருகிலுள்ள யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைத்துள்ளதாக அங்கிருந்து கிடை க்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உயிரிழந்த இளைஞரின் உடலில் எரிகாயம் காணப்படுகின்றமை யால், மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment