இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்ததில் நால்வர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் சிலாபம் - கொழும்பு வீதியின் மாதம்பே பழைய நகரில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , கொழும்பு - அவிசாவளை வீதியின் வெலிவிட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தும் உந்துருளியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment