மதுஷானுக்கு இலங்கை அரசியல்வாதிகள் ஆதரவு: விஜித ஹேரத்!

பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான மாகந்துரே மதுஷன், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டால் இங்குள்ள அரசியல்  வாதிகளாளேயே தப்பித்து விடுவாரென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாவனெல்லையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“மாகந்துரே மதுஷானுடன் கொடுக்கல்- வாங்களில் ஈடுபடும் பெரும்பாலான அரசியல்வாதிகள் இலங்கையில் உள்ளனர்.
மேலும் மாகந்துரே மதுஷனின் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகள் தொடர் பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்பினோம். இருப்பினும் எந்ததொரு பதிலும் வெளியிடப்படவில்லை.
ஆனால், மதுஷானுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டால் மக்களும் போதைப்பொருளுக்கு காரண மானவர்களை இனங்கண்டுகொள்வார்கள்.
இதேவேளை இலங்கைக்கு மதுஷான் கொண்டுவரப்பட்டாலும் சரியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பது சந்தேகமேயாகும்.
இலங்கை அரசியல்வாதிகள் சிலர் அவரை சட்டத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு கூட  உதவுவார்கள்” என விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment