மன்னாரில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன்!மன்னார், மாந்தை மேற்கு பகுதியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருங்கண்டல் ம.வி பாடசாலையில் கல்வி கற்று வரும் ஜே.நிர்மலன் என்ற மாணவரே நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிர்மலன் வழமை போல் நேற்று காலை பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற மாணவன் இரவாகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நிர்மலனை காணவில்லை என தேடிய போதே மணல் காட்டு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.


Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment