ஜி.விக்கு மீண்டும் டாக்டர் பட்டம்

இளம் இயக்குநர்களில் சமூக அக்கறை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.

இசையமைப்பாளராக வெற்றியடைந்த ஜி.வி நடிப்பிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி  வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், மீனவர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், காவிரி போராட்டம், விவசாயிகள் போராட்டம் என, பல்வேறு சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தும் வருகிறார்.

திரைப்படம் தவிர சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வரும் அவரது சமூக நலப் பணிகளைப் பாராட்டி, கடந்த ஆண்டு மே மாதத்தில் புனித ஆண்ட்ரூஸ் இறையியல் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது.

தற்போது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. 

அவரது இசைப்பயணத்தைப் பாராட்டி இதை அப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment