தேசிய அரசு குறித்த பிரேரணை இன்று இல்லை

தேசிய அரசு  அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று  நாடாளுமன்றில் சமர்பிக்காமல் விட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. 

நேற்று இரவு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய அரசு அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுக்குமாறு நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல கருத்து வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் இதன்போது எதிர்கட்சியினர் குறித்த பிரேரணை எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரியவருகின்றது. 

எவ்வாறாயினும் குறித்த விவாதத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டு இன்றை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் தேசிய அரசு தொடர்பான வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்குமாறு ஆளும் கட்சியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் பிரதம ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக எழுத்து மூலம் நேற்று அறிவித்திருந்தார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment