காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

மஸ்கெலியா பகுதியில் கடந்த 18 ஆம் திகதி காணாமல் போனதாக கூறபட்ட இளைஞன் இன்று  காலை   சடலமாக மீட்பட்டுள்ளார்.



கடந்த இரண்டு தினங்களாக மஸ்கெலியா பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் ரங்கல கடற்படையினரால்  இளைஞனின் சடலம் மீட்கபட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

காணாமல் போனதாக கூறப்படும் 30 வயதுடைய பெத்தும் மதுசங்க லியனகே, மஸ்கெலியா - மவுசாகலை நீர்தேக்கம் பக்கம் சென்ற காட்சி அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தபட்டிருந்த சி.சி.ரி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து காணாமல்போன இளைஞனின் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தனர். 

இளைஞனின் பாதணி ஒன்று மவுசாகலை நிர்தேக்கத்திற்க்கு அருகாமையில் கிடந்ததை இளைஞனின் உறவினர்கள்  இனங்கண்டதையடுத்து மாவுசாகலை நீர்தேக்கத்தில் தேடுதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில்  இன்றைய தினம்  குறித்த நீர்தேக்கத்திலிருந்து  இளைஞன் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஹற்றன் நீதவான் தலைமையில் மரண விசாரனைகள் இடம்பெற்றதுடன், இளைஞன் சடலமாக மீட்கபட்டமைக்கு காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment