தாதி தற்கொலை - நீதிகோரி கவனவீர்ப்புப் போராட்டம்

ஹற்றன் நகரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய தாதி உயிரிழந்த சம்பவத்துக்கு நீதிகோரி,  கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் தற்கொலை செய்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கோரி, சிவில் அமைப்புகள் ஹற்றன் நகரசபைக்கு முன்பாக நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் ஒன்று கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் (28.01.2019) அன்று ஹற்றன் டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பெண் சாவடைந்துள்ளார்.

தனது உயிரை அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண், மருத்துவர் மற்றும் அவரின் மனைவியே தனது இறப்புக்குக் காரணம் என்று பெற்றோருக்கு வாட்சப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவல் வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால் குறித்த தாதியின் சாவு தொடர்பில் ஆதாரங்கள் காணப்பட்டும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

தாதியின் சாவு தொடர்பில் ஹற்றன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த விசாரணை நீதியாக இடம்பெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும், குறித்த தாதியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment