போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டது...!!!!

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸின், பிரதான உதவியாளரான அந்தரேவத்தை சாமர என்பவர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை காவற்துறை விசேட அதிரடிப்படையினர் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மனிதக் கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்டு கப்பம் கோருதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு கொண்டவர் என, காவற்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்களை தடுக்கும் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மதூசுடன் கைதான பாதாள உலக குழு உறுப்பினரினன் உறவிரான இராணுவ அதிகாரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தும் முறைமை குறித்த இரு புத்தகங்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த புத்தகங்களை டுபாயிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக, மாத்தறை பிரதேச உயர் காவற்துறை அதிகாரி ஒருவர்; தெரிவித்துள்ளார். இதனிடையே, பாதாள உலககுழு உறுப்பினரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட இராணுவ சீருடைகளுக்கு நிகரான சீருடைகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன இராணுவத்தை சேர்ந்த ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் கிடைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் இலங்கையில் தொடர்புகளை பேணிவந்த நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கைது செய்யப்பட்ட 25 பேரில் 7 பேர் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment