அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்!


புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் திகதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை இராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். 
குறித்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து தெரிவித்துவருகின்ற்னர்.
போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,  அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். 
பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது, பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். 
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment