முனி படத்தில் தொடங்கிய ராகவா லாரன்சின் பேய் ஆட்டம் பார்முலா, காஞ்சனா, காஞ்சனா 2 என தொடர்ந்தது.
இப்போது காஞ்சனா 3 ஆம் பாகமும் உருவாகிவிட்டது.
ராகவா லாரன்சுடன் ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபிர் துகன் சிங், சத்யராஜ், சூரி, மனோபாலா, மயில்சாமி, யோகி பாபு, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கிஷோர், நெடுமுடி வேனு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
தற்போது தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment