முன்னாள் போராளிகள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களின் விவரங்கள் இன்று திரட்டப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இந்த விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் வாழ்வாதார உதவிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் நோக்கிலும், பிரதேச செயலகத்தில் சரியான தகவல் பேணுவதற்காகவும் இந்த தகவல் திரட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
வீடு ,கிணறு,மலசலகூடம் இல்லாதவர்கள், வாழ்வாதாரம் போன்ற விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment