ரஜினியை வைத்து படம் இயக்கி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள் தமிழ் சினிமா இயக்குனர்கள்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ரஜினி கனவு, விரைவில் நனவாகப்போகிறது.
ரஜினியின் 166 ஆவது படத்தை இயக்கும் அவர், ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் மும்பையில் முதல்கட்ட படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்.
இந்த நிலையில், படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு சில முக்கிய கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ், பழனி முருகன் கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்துள்ளார்.
அங்குள்ள பூசாரிகளுடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
0 comments:
Post a Comment