இணையத்தில் கலக்கும் இந்தியா

உலகிலேயே அதிகளவானவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்த எண்ணிக்கை முதன் முறையாக அரை பில்லியனைக் கடந்து 566 மில்லியனாக காணப்படுகின்றது.

இந்த வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 627 மில்லியனாக இருக்கும் என ஆய்வொன்றில் கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பீகார் மாநிலத்திலேயே அதிகளவானவர்கள் இணையப் பாவனை மேற்கொள்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை Kantar IMRB எனும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்திய அளவில் 493 மில்லியன் பயனர்கள் நாள்தோறும் இணையத்தை பயன்படுத்தி வருவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment