மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும்  சேதவிவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.  கடந்த வருடம் நவம்பரில் இருந்து இதுபோன்ற நிலநடுக்கங்கள் மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாக விட்டு விட்டு உணரப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி  முதலாம் திகதி 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் அப் பகுதியில் கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. 

இதன்போது, வீடுகளிலிருந்து மக்கள் ஓடி சென்றதில் 2 வயது சிறுமி கீழே விழுந்து காயமடைந்து  உயிரிழந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, 7 ஆம் திகதியும் பால்கரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து அரசு நிர்வாகம்,   முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கடந்த பிப்ரவரி 12 முதல் 21 ஆம் திகதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.

குறித்த மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த பிப்ரவரி 13 ஆம் திகதியும் லேசான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இது ரிக்டரில் 3.1 ஆக பதிவாகியது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment