நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் - கொண்டாடும் தல ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியிருந்தது.

சமூகவலைதளங்களில் டிரெண்ட்டாகி உள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக்கை  அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அஜித், ஹிந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீ-மேக்கில் நடித்து வருகிறார். 

அமிதாப் பச்சன் நடித்த வக்கில் வேடத்தில் அஜித் நடிக்க, அவரது மனைவியாக வித்யாபாலன் நடிக்கிறார். உடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரமான டாப்சி ரோலில் நடிக்கிறார். 

சதுரங்வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு அஜித் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். 

தலைப்பு வைக்கப்படாமலே இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வௌியிட்டுள்ளனர். 

“நேர்கொண்ட பார்வை” என பெயரிட்டுள்ளனர். பிங்க் படத்தின் பர்ஸ்ட் லுக் போன்றே இந்த பர்ஸ்ட் லுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

மே 1 ரிலீஸ் என சொல்லி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment