செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கு அடியில் நீர்பரப்பு!

செவ்வாய் கிரகத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தரைக்கு அடியில் பறந்த நீர்பரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் (Mars Express Orbiter) எனும் விண்கலம் தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.‌ தற்போது அனுப்பப்பட்ட‌ புகைப்படத்தின் மூலம் தரைக்கு அடியில் பறந்த நீர்பரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அதன்படி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4,000‌ முதல் 5,000 மீட்டர் ஆழத்தில் நீர் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த விண்கலம் வெளியிட்ட‌ புகைப்படங்களில் நிலத்தின் மேற்பரப்பில் சகதி போன்ற அமைப்பு காணப்படுகிறது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment